பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் கிராமத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது

பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் கிராமத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது
X

ஆனைவாரி கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஆனைவாரி கிராமத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் தற்போது தார் சாலை அமைக்கப்படுகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஆனைவாரி கிராமத்தில் உள்ள சாலைகள் சுமார் 15 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது.

பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்திருந்த போதும் சாலைகள் செப்பனிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியால் தற்போது தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதை பார்த்த கிராம பொது மக்கள் கட்சியின் சமூகப் பணியை பெரிதும் பாராட்டினர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு