ஜெயலலிதா மரணத்திற்கு நல்ல தீர்ப்பு; அங்கன்வாடி சங்க போஸ்டரால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் வண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வி.ஆர் .ராதா. இவர், கலைஞர், எம்ஜிஆர் அம்மா சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நல சங்கத்தின் நிறுவனராக உ்ளளார்.
இந்நிலையில், வி.ஆர்.ராதா சார்பில் "ஜெயலலிதாவின் மரணத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்கிடு" என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த போஸ்டரில், ஜெயலலிதா மரணம் குறித்து 14 கேள்விகளை கோரிக்கையாக வைத்துள்ளார்.
மேலும், ஜெயலலிதா மர்ம மரணத்தை விளக்கிட சங்கத்தின் சார்பில் தமிழக முல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்வதாக அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த போஸ்டரால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu