/* */

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க மருத்துவ முகாம் நிறைவு விழா

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நிறைவு விழா இன்று நடைபெற்றது

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க மருத்துவ  முகாம் நிறைவு விழா
X

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க மருத்துவ முகாம் நிறைவு விழா

ரோட்டரி மாவட்ட அளவில் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஸ்ரீ மகாலஷ்மி மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நிறைவு விழா இன்று நடைபெற்றது.

இந்த முகாமில் இதுவரை 147 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு மார்பகப் புற்று நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகாம் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் இரமேஷ்பாபு தலைமை தாங்கினார், செயலாளர் செந்தில்குமரன் இறைவணக்கம் வாசித்தார், மருத்துவர் எழிலரசி கார்த்திகேயன் வரவேற்றார் , மாவட்ட தலைவர்கள் வின்சென்ட், அன்பழகன் , திலீப் , சாசன தலைவர் வசந்தகுமார், சிறப்பு திட்ட தலைவர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு திட்டங்களின் மாவட்ட சேர்மன் ரேவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு திட்டங்களின் தலைவர்கள் தெய்வீகன், மோகன்ராஜ், வெங்கடாஜலபதி, முத்துக்குமாரசாமி உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!