கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவால் தீப்பிடித்து 3 கூரை வீடுகள் சாம்பல்

கள்ளக்குறிச்சி அருகே  மின்கசிவால் தீப்பிடித்து 3 கூரை வீடுகள் சாம்பல்
X

 தீப்பிடித்த கூரை வீடுகளை தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை  அணைத்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தில் 3 கூரை வீடுகள் மின்கசிவு காரணமாக தீ பிடித்து சாம்பலானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசந்தா, ஜெயலட்சுமி ,ராமு ஆகியோருக்கு சொந்தமானவீடுகள் அடுத்தடுத்து இருந்தன. மின்கசிவு ஏற்பட்டதால் கோரை வீடுகள் தீப்பிடித்துக் கொண்டன. உடனே அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும், திருநாவலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேத ஏதும் ஏற்படவில்லை. ஆனால்,வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!