உளுந்தூர்பேட்டை வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
உளுந்தூர்பேட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் பிடாகம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 5 வாக்குச்சாவடி மையங்களின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின்போது தேர்தல் பார்வையாளர் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவித்திட போதிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும், நான்கு பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணும் மேசைகள் மற்றும் இதர பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்
தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிடாகம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, வாக்காளர்கள் அதிக வெயில் மற்றும் மழை போன்ற இயற்கை இடற்பாடுகளில் இருந்து வாக்களிக்க ஏதுவாக நிழற்பந்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடவும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளங்கள் ஏற்படுத்திடவும் கூறினார்.
இவ்வாய்வின் போது உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu