10 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய சிறுதுளி அறக்கட்டளை: கிராம மக்கள் நன்றி

10 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய சிறுதுளி அறக்கட்டளை: கிராம மக்கள் நன்றி
X

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுத்த சிறுதுளி அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர்கள்.

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி 10 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய சிறுதுளி அறக்கட்டளைக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஊராட்சியின் காந்திநகரில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாமலேயே இருந்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் வேண்டி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், இதனை அறிந்த சிறுதுளி அறக்கட்டளை தோழர்கள் தாமாக முன்வந்து, ரூ.34000 மதிப்பீட்டில் சுற்றுச் சுவரை கட்டி முடித்துள்ளனர்.

இந்த சுற்றுச்சுவர் கட்டி முடிக்க சமூக ஆர்வலர்கள் சஞ்சய், அழகிரி அறக்கட்டளை உறுப்பினர்கள் தன்னார்வலர் மற்றும் ஊர்பொதுமக்கள் ஆகியோர் உதவி புரிந்துள்ளனர்.

சிறுதுளி அறக்கட்டளை தோழர்களின் இந்த முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!