Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டையில் வாகனம் மோதி சிறுவர்கள் படுகாயம்
உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள சேலம் ரவுண்டானா அருகே ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்து. சிறுவர்கள் படுகாயம்.
HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள சேலம் ரவுண்டானா அருகே ஸ்கூட்டியில் இரண்டு சிறுவர்கள் வந்து கொண்டிருந்தனர், அப்போது அவர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்கன்று பயமறியாது என்பதற்கேற்ப சிறுவர்களிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்தால் இது போன்ற விபத்துகளை சந்திக்க நேரிடும் என்பதை பொற்றோர்கள் உணர வேண்டும்.