திருநாவலூரில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமூக வளைகாப்பு விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் மேற்பார்வையாளர் சந்தனவதி வரவேற்றார்கள். விழாவினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் திருநாவலூர் ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், உளுந்தூர்பேட்டை சேர்மன் ராஜவேலு,மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஒன்றிய கவுன்சிலர் விஜய், ஆறுமுகம், சுந்தரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வ கனேஷ், கண்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் தண்டபாணி, மருதுபாண்டி, உமா நடராஜன், செம்மனந்தல் ஊராட்சி செயலாளர் சுந்தர், வண்டிப்பாளையம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு புடவை உலர் திராட்சைகள்.தாம்பூல தட்டுகளுடன் பூ, பழங்கள் வளையல் உள்ளிட்ட சீர்வரிசைகள் வழங்கினர். ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் நளினா அவர்கள் கர்ப்பிணி பெண்களை நலத்துடன் பாதுகாக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தாய்மார்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் ஊட்ட வேண்டும். மருத்துவர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu