உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: போக்குவரத்து பாதிப்பு
உளுந்துார்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அரியலுார் பகுதியைச் சேர்ந்தவர் நன்னிலவன், டிரைவர். இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரட் பாக்கெட்டுகளை இறக்கி விட்டு சென்னை நோக்கி ஈச்சர் லாரியை ஓட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே வந்துகொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் நன்னிலவன் சிறு காயத்துடன் தப்பினார்.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story