உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தொலைபேசி எண் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு  தொலைபேசி எண் வெளியீடு
X

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளகுறிச்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி வாயிலாக தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை பின்பற்றிட தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் அறிந்திடவும் மற்றும் புகார்கள் தெரிவித்திட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 1800 425 8510 அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் வசதிகளுக்காக கீழ்கண்ட ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ரிஷிவந்தியம் 04151-239 223,

திருக்கோவிலூர் 04153252 650,

திருநாவலூர் 04149-224 221,

உளுந்தூர்பேட்டை 04149222 238,

கள்ளக்குறிச்சி 04151-222 371,

சின்னசேலம் 04151-236 235,

சங்கராபுரம் 04151-235 223,

தியாகதுருகம் 04151-233 212

கல்வராயன்மலை 04151242 229 ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இத்தொலைபேசி எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தகவல் மற்றும் புகார்களை தெரிவித்திடலாம் என அறிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!