சங்கராபுரம் அருகே சாராயம் காய்ச்சி விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் காய்ச்சி விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விஜயா.

சங்கராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி தொடர்ந்து விற்பனை செய்துவந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கா.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி விஜயா. இவர் அந்த கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டுவந்தார்.

இதனையடுத்து, அவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்து வந்துள்ளனர். ஆனாலும், விஜயா கல்லச்சாராயம் விற்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், விஜயாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai marketing future