சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
அக்கராப்பாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 18 வார்டுகள் உள்ளன . இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். உரிமைப் பிரச்சினை குறிப்பாக அக்கராப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடக்கநந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அக்கரா பாளையம் 7 மற்றும் 8 ஆகிய வார்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று அக்கரா பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
கச்சராபாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் சமாதானம் கூறியும் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu