வாக்கு எண்ணும் மையங்களில் பொதுமக்கள், பார்வையாளர்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்

வாக்கு எண்ணும் மையங்களில் பொதுமக்கள், பார்வையாளர்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் அறிவுறுத்தல்.

வாக்கு பெட்டிகள் வைப்பறை, வாக்குச் சீட்டுகள் பிரித்தல், வாக்கு சீட்டு எண்ணும் அறைகளை தோ்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்

வாக்கு எண்ணும் மையங்களில் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்திடும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென மாவட்ட தேர்தல் பார்வையாளர் .கே.விவேகானந்தன் அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குள் பட்ட உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணும் சமயத்தில் மேற்கொள்ளப் பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன், இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 10,715 நபர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தினங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் பாதுகாப்பு ஏற்பாடுடன் தொடர்புடைய வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 12-10-2021 அன்று வாக்கு என்றும் பணி நடைபெறும். அதன் தொடர்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இன்று ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இம்மையத்தில் வாக்கு பெட்டிகள் இருப்பறை, வாக்குச் சீட்டுகள் பிரித்தல் மற்றும் வாக்கு சீட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வாக்கு எண்ணிக்கை மையமான தியாகதுருகப் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறைகள் கண்காணிப்பு அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மேசை அறைகள் மற்றும் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகிய பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடுவதை தவிர்த்திடும் நோக்கில் கூடுதல் பாதுகாப்பு வசதியினை ஏற்படுத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட தேர்தல் பார்வையாளர் அவர்கர் தெரிவித்துள்ளார்.ஆய்வியப் போது, ரிஷிவந்தியம் மற்றும் தியாகதுருகம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil