சங்கராபுரம் பட்டாசுக் கடையில் பயங்கர தீவிபத்து: 5 பேர் உயிரிழப்பு

சங்கராபுரம் பட்டாசுக் கடையில் பயங்கர தீவிபத்து: 5 பேர் உயிரிழப்பு
X
தீவிபத்து ஏற்பட்ட பட்டாசுக்கடை.
சங்கராபுரம் பட்டாசுக் கடையில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பட்டாசுக் கடையில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 8-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!