சங்கராபுரம் பட்டாசுக் கடை தீவிபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு

சங்கராபுரம் பட்டாசுக் கடை தீவிபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு
X

தீவிபத்தில் தரைமட்டமான பட்டாசுக்கடை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பட்டாசுக் கடை தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தில் காயமடைந்து சென்னை KMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சஞ்சய் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கடை வீதியில் முருகன் ஸ்டோர் பட்டாசுக் கடையில் கடந்த 26ம் தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாகபட்டாசு குடோன் தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் உள்ள பேக்கரியில் வைத்திருந்த காஸ் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.

இந்த விபத்தில் 3 கடைகள் இடிந்து தரைமட்டமாகின. தீயில் சிக்கி 7 பேர் உடல் கருகி இறந்தனர். கடையின் உரிமையாளர் செல்வகணபதி உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சஞ்சய், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!