சங்கராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சுவரொட்டிகள் அகற்றம்

சங்கராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சுவரொட்டிகள் அகற்றம்
X

சுவரொட்டிகளை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள்.

சங்கராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சிக்கு வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி சங்கராபுரம் பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், விளம்பரங்கள், போஸ்டர்கள், ஆகியவற்றை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்