சங்கராபுரம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு

சங்கராபுரம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு
X

சங்கராபுரம் பேரூராட்சி.

சங்கராபுரம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள உள்ள நிலையில் திமுக 9 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் திமுக சார்பில் பேரூராட்சி தலைவராக 13வது வார்டு கவுன்சிலராக ரோஜா ரமணியையும், துணைத்தலைவராக இந்திய காங்கிரஸ் கட்சி சார்ந்த ஆஷாபி ஆகியவர்களையும் வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திமுகவைச் சார்ந்த சங்கராபுரம் நகர பொறுப்பாளர் தாகப்பிள்ளையின் துணைவியார் தா.ரோஜா ரமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மேலும் திமுக தலைமை கழகம் அறிவிப்பின்படி காங்கிரஸ் கட்சியை சார்ந்த 5-ஆவது வார்டு கவுன்சிலர் ஊராட்சி துணைத்தலைவர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து மறைமுக தேர்தலுக்கு வாக்களிக்க யாரும் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக சங்கராபுரம் பேரூராட்சியின் செயல் அலுவலர் சம்பத்குமார் தகவல் பலகையில் அறிவிப்பு செய்தார்.

இதனால் சங்கராபுரம் பகுதியில் கூட்டணி தர்மத்தை திமுக மீறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் இடையே மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா