சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி மக்கள் சாலை மறியல்

சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி  மக்கள் சாலை மறியல்
X

சின்ன சேலம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கார்டன் நகர், சண்முகம் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு குடிநீர் சாலைவசதி மின்சாரவசதி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சின்னசேலம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பேரூராட்சி செயலாளர் உஷா வருவாய் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து அனைத்து வசதிகளும் செய்து தருகின்றோம் என்று வாக்குறுதி அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!