சங்கராபுரத்தில் மலைக்குறவர் ஆதிவாசி மக்கள் நலச்சங்க புதிய கிளை திறப்பு விழா

சங்கராபுரத்தில் மலைக்குறவர் ஆதிவாசி மக்கள் நலச்சங்க புதிய கிளை திறப்பு விழா
X

சங்கராபுரம் இந்திரா நகரில் மலைக்குறவர் ஆதிவாசி மக்கள் நலச் சங்க புதிய பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

சங்கராபுரத்தில் மலைக்குறவர் ஆதிவாசி மக்கள் நலச்சங்க புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் இந்திரா நகரில் மலைக்குறவர் ஆதிவாசி மக்கள் நலச் சங்க புதிய பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில தலைவர் கனகராஜ், நிறுவனத் தலைவர் எம்.ஜெகநாதன், மாவட்ட தலைவர் முருகன், செயல் தலைவர் ஏழுமலை ஆகியோர் நலச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பெயர் பலகையைத் திறந்து வைத்தனர்.

பின்னர் புதிய கிளை நிர்வாகிகள் தலைவராக கே.அரங்கநாதன் பொதுச்செயலாளராக ஆறுமுகம் பொருளாளராக கே.ஜெயவேலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஜாதி சான்று,சாலை வசதி, குடிநீர் வடிகால் வசதி,பாதுகாப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அவர்கள் தெரிவிக்கையில், சங்கராபுரம் இந்திராநகர் பகுதியில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்தாலும் ஜாதி சான்று கிடைப்பதில்‌ மிகவும் காலம் தாழ்த்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அதிகாரிகள் எங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். எனவே எங்களுக்கு விரைவாக ஜாதி சான்று கொடுத்து எங்களுக்கு வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதில் உறுப்பினர்கள் கலைச்செல்வன், பார்த்தசாரதி, அருமை செல்வன்,குப்புசாமி, கணேசன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா