'இப்ப விழுமோ..எப்ப விழுமோ..? சங்கராபுரத்தில் அபாய நீர்த்தேக்க தொட்டி

இப்ப விழுமோ..எப்ப விழுமோ..?  சங்கராபுரத்தில் அபாய நீர்த்தேக்க தொட்டி
X

இடிந்து விழும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டி.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேல் நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், குச்சிக்காடு கிராமத்தில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகின்றன. அந்த தொட்டியை இடித்துவிட்டு புதிய மேல்நிலை தொட்டி அமைத்து தர இப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இன்னும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

அந்த தண்ணீர்த் தொட்டி இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் மிக மோசமாக உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த நீர்த்தேக்கத் தொட்டியை உடனே அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று இப்பகுதி மக்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!