/* */

கள்ளக்குறிச்சி கொரோனா சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி கொரோனா சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

சிறுவங்கூர் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி சிறுவங்கூரில் செயல்பட்டு வரும் நோய் சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதி அமைப்பது குறித்து கலெக்டர் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,500-ஐ தாண்டியது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையத்தில் 850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் உள்ளன.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் அரசு மருத்துவ கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தில், கூடுதல் கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 200 படுக்கைகளில், 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை (மருத்துவம்) செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 10 May 2021 5:38 AM GMT

Related News