சங்கராபுரம் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டம்

சங்கராபுரம் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டம்
X

ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியபிள்ளை பொங்கல் பரிசு வழங்கினார்.

பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் க.அலம்பளம் கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியபிள்ளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் வார்டு உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் பரிசாக வேட்டி சேலை வழங்கினார். பின்னர் தமிழர் திருநாளான பொங்கல வாழ்த்துக்களை ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியப்பிள்ளை கூறினார். இச்சம்பவம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக கூறினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்