ஊரக உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 651 பேர் மனுதாக்கல்
பைல் படம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று (16ம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் விபரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 7 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 147 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 478 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.மொத்த பதவிகளுக்கும் சேர்த்து 632 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
முதல் நாளான நேற்று முன்தினம் (15ம் தேதி, புதன்கிழமை) கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 19 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதன்படி, இதுவரை மொத்த பதவிகளுக்கும் சேர்த்து 651 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் 1 வது வார்டில் அழகேசன், 2வது வார்டில் பவானி, 3வது வார்டில் சீனுவாசன், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 5வது வார்டில் செல்வராசு, அசோதை, 11வது வார்டில் பிாியங்கா, 13வது வார்டில் ஜெயா ஆகிய 7 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் சம்பந்தமான புகார்களை 18004257072, 18004257073 மற்றும் 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
லஞ்சம் பற்றிய புகார்களை விழிப்புப்பணி, இலஞ்ச ஒழிப்பு இயக்குநர், சென்னை-28. என்ற முகவரிக்கு எழுதி அனுப்பலாம். மேலும் www.dvac.tn.gov.in இணையதள முகவரியிலும், 044 - 24615989, 24615929 , 24615949 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu