ரிஷிவந்தியத்தில் தர்பூசணி, முலாம் பழங்கள் விற்பனை ஆகாமல் வீணாகி வருகின்றன.

ரிஷிவந்தியத்தில் தர்பூசணி, முலாம் பழங்கள் விற்பனை ஆகாமல் வீணாகி வருகின்றன.
X
ரிஷிவந்தியம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, முலாம் பழங்கள், ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாமல் வீணாகி வருகின்றன.

ரிஷிவந்தியம் பகுதியில் மண்டகபாடி, பெரியபகண்டை, எகால் ஆகிய கிராமங்களில் தர்பூசணி மற்றும் முலாம் பழம் பயிரிடப்பட்டுள்ளது. இவை அறுவடையானதும் வெளிமாவட்டத்தில் உள்ள பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், புரோக்கர்கள் மூலம் உள்ளூர் கடைகளுக்கும் கொண்டு செல்லப்படும்.

ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடங்கி, பழச்சாறு தயாரிப்பு நிறுவனங்களும், உள்ளூர் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

இதனால் விளைநிலத்திலேயே பழங்கள் அழுகி வீணாகி, கால்நடைக்கு உணவாக அளிக்கப்படுகிறது. ஊரடங்கிற்கு முன் ஒரு கிலோ முலாம், தர்பூசணி 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது நஷ்டத்திற்கு 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும் மக்கள் வாங்க முன்வராததால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா