ரிஷிவந்தியம் அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

ரிஷிவந்தியம் அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்
X

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கால்நடை மருத்துவமுகாம்.

ரிஷிவந்தியம் அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்,வேளானந்தல் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பழைய சிறுவங்கூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பால்ராஜ் தலைமையில்,ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பிலோமினாள் ராஜ் வரவேற்றார்.

இம்முகாமில் வேளானந்தல் கால்நடை மருந்தக கூடுதல் பொறுப்பு கால்நடை உதவி மருத்துவர் டாக்டர்.செல்வம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை,குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம்,சினை ஊசி,சினை ஆய்வு ஆகிய சிகிச்சைகளை மேற்கொண்டனர்

மாடுகளுக்கு தாது உப்பு கலவைகளும்,சிறந்த கிடேரி கன்று பராமரிப்பு மற்றும் சிறந்த கறவை மாடு வளர்ப்பு பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் கிளை செயலாளர்கள் சக்திவெல், ராமலிங்கம்,கோவிந்தராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சக்திவேல், திருச்செல்வன், கால்நடை தொடர்பு நிலை பணியாளர் சுப்பிரமணியன் சமூக உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!