ரிஷிவந்தியம் அருகே வேட்பாளரிடம் ரூ.20,000 மதிப்பு பரிசுப்பொருட்கள் பறிமுதல்

ரிஷிவந்தியம் அருகே வேட்பாளரிடம் ரூ.20,000 மதிப்பு பரிசுப்பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மரத்தாலான விநாயகர் சிற்பங்கள்.

ரிஷிவந்தியம் அருகே வேட்பாளரிடமிருந்து ரூ.20,000 மதிப்பிலான பரிசுப்பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் .

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய பகண்டை ஊராட்சியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் துணை தாசில்தார் விஜயன் மற்றும் போலீசார் மாலை 3:30 மணியளவில் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது பெரியகண்டை காட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஹரிகிருஷ்ணன் 68 என்பவர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது தெரியவந்தது. அவரிடமிருந்து மரத்தால் செய்யப்பட்ட 14 சிறிய அளவிலான விநாயகர் சிற்பங்கள் ,8 துண்டுகள், 14 மஞ்சள் கயிறு குங்குமம், மற்றும் 157 பூட்டு சாவி கல்வி உள்ளிட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அதன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி