ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 6வது வார்டில் 7 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 6வது வார்டில் 7 பேர் போட்டி
X
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரிஷிவந்தியம் ஒன்றியம் 6வது வார்டில் 7 முனைப்போட்டி நிலவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சீனு, அதிமுக சார்பில் சாந்தி, தேமுதிக சார்பில் ஜெயபாலன், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வராஜ், சுயேட்சையாக ஐயப்பன், விஜயகுமார், ராமதாஸ் ஆகிய மொத்தம் 7 பேர் போட்டியிடுகின்றனர்.

ரிஷிவந்தியம் 6வது வார்டில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 7 பேர் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் 7 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!