வாக்குப்பதிவு மையம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
சின்னசேலம் மற்றும் வடக்கனந்தல் பேரூராட்சி ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மற்றும் வடக்கனந்தல் பேரூராட்சி ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். சின்னசேலம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள், வடக்கனந்தல் பேரூராட்சியில் உள்ள 11 வார்டுகளில் பதிவாகும் ஓட்டுகளை சின்னசேலம் அடுத்த மேலுார் டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் எண்ணும் பணி நடைபெறவுள்ளது.
இப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, ஓட்டுப் பெட்டிகளை வைக்கும் 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் ஓட்டு எண்ணும் அறைகளில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.மேலும் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்து செல்ல தனித்தனியே பாதைகள் அமைக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டதை ஆய்வு செய்தார்.
அலுவலர்களுக்கு உணவு கொண்டு வருவதற்கும், அவசர தேவைக்கும் தனியான பாதைகள் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, கீழ் தளத்தில் ஓட்டு எண்ணிக்கை நிலவரம் மற்றும் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எல்.இ.டி.டிஸ்பிளே அறை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா, ஆறுமுகம், டி.எஸ்.பி., ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், மேலுார் வி.ஏ.ஓ.வசந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu