ரிஷிவந்தியம் பாமக போரட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: போலீஸ் குவிப்பு

ரிஷிவந்தியம் பாமக போரட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: போலீஸ் குவிப்பு
X

கல்வீச்சு சம்பவத்தால் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் அரசுப் பேருந்து.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பாமக போரட்டத்தில் அரசு பஸ் மீது கல்வீசித் தாக்கியதால் பதற்றம் நிலவி வருகிறது.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசு வழங்கியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோட்டில் பாமக சார்பில் போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்தது.

இந்த கல்வீச்சில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பெண் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தால் பகண்டை கூட்ரோடு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings