ரிஷிவந்தியத்தில் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

ரிஷிவந்தியத்தில் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
X

சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர்

பிரதமரின் கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் ரூ 2.60 கோடி சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளானந்தல் ஊராட்சியில் வேளானந்தல் முதல் பள்ளிப்பட்டு வரை பாரத பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 2.60 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என் ஸ்ரீதர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பள்ளிபுனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 13.35 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!