கனமழையால் 600 ஆடுகள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே கனமழையால் 600 ஆடுகள் உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முனுசாமி , அஞ்சலை , கருத்தாபிள்ளை. இவர்களுக்கு சொந்தமான 600 ஆடுகள் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்று விட்டு ஆட்டுபட்டியில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரவு பெய்த மழையால் மணிமுத்தாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 600 ஆடுகள் கன மழையால் பரிதாபமாக உயிரிழந்தது.தற்போது 600 ஆடுகளில் 300 ஆடுகள் மட்டுமே ஆட்டுபட்டியில் இறந்த நிலையில் உள்ளன. மீத முள்ள ஆடுகள் ஆறு மற்றும் ஏரிகளின் கரையோரத்தில் உயிரிழந்து மிதக்கின்றது என கூறப்படுகிறது. ஒரே நாளில் 600 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu