கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்
கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு
சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரின் மரணத்தை தொடர்ந்து அப்பகுதியில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு அப்பள்ளியிலிருந்த பொருட்கள் உட்பட பள்ளி வளாகத்தை சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் பணியாற்று வரும் அந்தப் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
அந்தப் பள்ளியில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களின் நலன் கருதி பள்ளி திறப்பு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கலவரம் காரணமாக பள்ளி சேதமடைந்து மாணவர்கள் கல்வியை தொடர முடியாத சூழலில், ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் வகுப்பு தொடங்கப்படும் என்றும் கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளில் படிக்கச் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடக்கும் என அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu