கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
X
Kallakurichi District News- கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

Kallakurichi District News- கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதுடன், பள்ளி சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

இந்த விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்யப்பட்டார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று பொறுப்பேற்று கொண்டார். இவர்தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கோட்டார்பட்டி என்ற கிராமத்தைச்சேர்ந்தவர். எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர்.

1998-ம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் இவர் டி.ஐ.ஜி. பதவி உயர்வு பட்டியலில் உள்ளார். வரும் ஜனவரியில் இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறுவார்.

கடலூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பணியில் இருந்துள்ளார். சென்னையில் தியாகராயநகர், அடையாறு, பூக்கடை துணை கமிஷனராக பதவி வகித்துள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராகவும் இருந்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!