கள்ளக்குறிச்சியில் 97 பயனாளிளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வேலு வழங்கல்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு.
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., விஜய்பாபு வரவேற்றார்.
கூட்டத்தில், அமைச்சர் வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதில், தங்களது தொகுதிகளுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து, சாலை வசதி, குடிநீர் பிரச்னைக்கு நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு துறை, பிற்படுத்தபட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மின்வாரிய துறை, ஊரக வளர்ச்சி மூலம் 97 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 29 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
கூட்டத்தில், ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், சாய்வர்தனி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், துணை சேர்மன் தங்கம், ஒன்றிய சேர்மன்கள் கள்ளக்குறிச்சி அலமேலு ஆறுமுகம், தியாகதுருகம் தாமோதரன், ரிஷிவந்தியம் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், சின்னசேலம் சத்தியமூர்த்தி, சங்கராபுரம் திலகவதி நாகராஜ், கல்வராயன்மலை சந்திரன், உளுந்துார்பேட்டை ராஜவேல், திருநாவலுார் சாந்தி இளங்கோவன், திருக்கோவிலுார் அஞ்சலாட்சி அரசக்குமார், துணை சேர்மன்கள் நெடுஞ்செழியன், அன்புமணிமாறன், விமலா முருகன், சென்னம்மாள் அண்ணாதுரை உட்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். திட்ட இயக்குனர் மணி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu