ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர், திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருநாவலூர் நகராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னை தெரசா பொறியியல் கல்லூரி வாக்குச எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மையங்களில் வாக்கு பெட்டிகள் இருப்பறை, வாக்குச்சீட்டுகள் பிரித்தல் மற்றும் வாக்கு சீட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு காண்காணிப்பு மையமான ஸ்ரீவித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டடது. இவ்வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் அறைகள் மற்றும் கண்காணிப்பு அறைகளின் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சி பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளான தடுப்பு வேலிகள் அமைத்தல், பாதுகாப்பு அறை, போக்கு பாலம் அறைகள் பற்றும் இதர பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைகடைபிடித்து, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு வாக்கு எண்ணிக்கை மையங்களை அமைத்திடவும் அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின்போது திட்ட இயக்குநர் (மா.கா.) மரு.இரா.பாணி திருநாவலுார் ஒன்றியவட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருக்கோவிலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ரிஷியந்தியம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்