/* */

கொழுந்தரம்பட்டு ஊராட்சி மன்ற வாசலில் தேங்கி நிற்கும் மழை நீர்

கொழுந்தரம்பட்டு ஊராட்சி கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொழுந்தரம்பட்டு ஊராட்சி மன்ற வாசலில் தேங்கி நிற்கும் மழை நீர்
X

கொழுந்தரம்பட்டு ஊராட்சி அலுவலகக் கட்டிடத்தின் முன் தேங்கி நிற்கும் மழைநீர். 

கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் கொழுந்தரம்பட்டு ஊராட்சி அலுவலகக் கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் கொழுந்தரம்பட்டு கிராமத்தில் பழமையான ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது .கடந்த 6 ஆண்டுகளாக ஊராட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததால் ஊராட்சி மன்ற கட்டிடத்தின் வெளியேயும் உள்ளேயும் அதிக அளவு மழை நீர் தேங்கி நிற்பதால் கட்டிடம் ஊறி இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாலும் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுத்தப்படுத்தி மழைநீரை அகற்றி நடவடிக்கை எடுக்க கொழுந்திரப்பட்டு கிராம மக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Oct 2021 12:26 PM GMT

Related News