கள்ளக்குறிச்சி தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர் பங்கேற்பு

பயனாளிளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.

கள்ளக்குறிச்சி தொகுதியில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி தொகுதியில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

நீலமங்கலத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், திட்ட இயக்குனர் மணி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., விஜய்பாபு வரவேற்றார்.

விழாவில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு 68 ஆயிரத்து 879 பயனாளிளுக்கு 192 கோடியே 49 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

விழாவில், நகராட்சி கமிஷனர் குமரன், தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன்கள் நெடுஞ்செழியன், விமலா முருகன், மாவட்ட துணை சேர்மன் தங்கம், ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம், நகர செயலாளர் சுப்ராயலு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம், முருகன், காமராஜ், எத்திராஜ், மலையரசன், பெருமாள், ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் இளங்கோவன் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் நன்றி கூறினார்.

Tags

Next Story