கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகையை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடன் உதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்றுகளின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகளிடம் 21 மனுக்களும் பொதுமக்களிடம் 252 மனுக்கள் பெறப்பட்டன.
முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு 34 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை காலுக்கான அளவீடு எடுக்கப்பட்டது சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச தரம் வாய்ந்த அதிநவீன செயற்கை கால்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சின்னசேலம் வட்டம் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமை பொருள் ஆட்சியராக பணியாற்றிய பாண்டியன் என்பவர் கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டு கடந்த 23.05.2021 உயிரிழந்தார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25,00,000/திற்கான காசோலையை இறந்தவரின் வாரிசுதாரரும் மனைவியுமான செல்வராணி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி. விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் க.சுப்பிரமணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu