ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக் கோரி கள்ளக்குறிச்சி மாணவர்கள் போராட்டம்

ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக் கோரி  கள்ளக்குறிச்சி மாணவர்கள் போராட்டம்
X

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலவலகம் முன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்தக் கோரி அரசு கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கொரோனா பேரிடர் காலம் என்பதால் அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், மாணவர்கள் பலர் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, தேர்வினையும் ஆன்-லைன் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!