திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை
X

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதனூர் கிராம மக்கள்.

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் அம்பிகா விஜயகுமார், மற்றொரு வேட்பாளர் கிளாப் பாளையம் சாமுண்டீஸ்வரி முருகன் இருவரும் போட்டியிட்டனர்.

இவற்றில் ஆதனூர் ஊராட்சியில் வேட்பாளராக போட்டியிட்ட அம்பிகா விஜயகுமார் என்பவர் 1411 வாக்குகளும், கிலாபாளையத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி முருகன் என்பவர் 974 வாக்குகள் வாங்கியுள்ளார்.

இவற்றில் வெற்றி பெற்றவர் அம்பிகா விஜயகுமார் என்பவரை அறிவிக்காமல், சாமுண்டீஸ்வரி முருகன் என்பவரை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று கண்ணீர் விட்டு அழுதனர். ஆதனூர் கிராமத்திலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

Tags

Next Story