கள்ளக்குறிச்சி ஊரக உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் வட்டார பார்வையாளர்கள் நியமனம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 9 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தேர்தல் மாதிரி படத்தை விதிகளை பின்பற்றிட தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 9 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருக்கோவிலூர் வட்டார பார்வையாளர் கீர்த்தனா துணை பதிவாளர் கூட்டுறவு கைப்பேசி எண்: 70929 99624, திருநாவலூர் வட்டார பார்வையாளர் பி.ராஜவேல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலங்கள்) கைப்பேசி எண்: 99918 01814, உளுந்தூர்பேட்டை வட்டார பார்வையாளர் ஜி.சாந்தி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கைப்பேசி எண்: 63803 90016, ரிஷிவந்தியம் வட்டார பார்வையாளர் ஆர்.மஞ்சுளா உதவி இயக்குநர் ஊராட்சிகள்) கைப்பேசி எண்: 74026 06462, கள்ளக்குறிச்சி வட்டார பார்வையாளர் பெரியசாமி உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்பு) கைப்பேசி எண்: 94435 38866, சின்னசேலம் வட்டார பார்வையாளர் கே.முருகள் உதவி இயக்குநர் தோட்டக்கலை) கைப்பேசி எண்: 85103 55837, சங்கராபுரம் வட்டார பார்வையாளர் இராஜாமணி தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கைப்பேசி எண்: 88703 02086, தியாகதுருகம் வட்டார பார்வையாளர் ஏ-தங்கராஜ் உதவி இயக்குநர்(வேளாண்மை) கைப்பேரி எண்: 96008 70410, மற்றும் கல்வராயன்மலை வட்டார பார்வையாளர் எல். ஆரோக்கியசாமி {மாவட்டக் கல்வி அலுவலர்) கைப்பேசி எண்: 98651 79717 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வட்டார மேற்பார்வையாளர்கள் தேர்தல் நடைபெறும் முந்தைய நாளும், தேர்தல் நடைபெறும் நாளன்றும் பற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்றும் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.மேலும், பொது மக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து வட்டார பார்வையாளர்களின் கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்திடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu