வேட்புமனுக்களை கவனத்துடன் பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தல்

வேட்புமனுக்களை கவனத்துடன் பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொள்ள  அறிவுறுத்தல்
X

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கே.விவேகானந்தன்ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்களை மாலை 5 முதல் 6 மணி வரை அளிக்கலாம்
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பணியிடங்களுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்கள் குறித்து தேர்தல் பார்வையாளர் .கே.விவேகானந்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், தேர்தல் பார்வையாளர் கூறியதாவது: மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 06.10.2021 அன்று திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இரண்டாம் கட்டாமாக 09:10 2021 அன்று கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன் மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறஉள்ளது.

    தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 167 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 1,209 வேட்பு மனுக்களும், ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்களுக்கு 2,256 வேட்பு மனுக்களும், மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கருக்கு 10.256 வேட்பு மனுக்களும் என மொத்தம் 13,878 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

    இன்று சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக்தில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பாகவும், வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பெறப்பட்ட வேட்பு மனுக்ககளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவனத்துடன் பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பதவியிடங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

    இம்மையங்களில் வாக்கு பெட்டிகள் இருப்பறை, வாக்குச் சீட்டுகள் பிரித்தல் மற்றும் வாக்கு சீட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பணிகளை விரைந்து முடித்து வாக்கு எண்ணும் நாளன்று அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்திடவும் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 18004258510 என்ற எண்ணிலும், தேர்தல் பார்வையாளர் அவர்களுக்கு 9487913207 என்ற கைப்பேசி எண்ணிற்கும், 9442291378 என்ற தொடர்பு அலுவலர் கைப்பேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், இந்திலி வனத்துறை பயணியர் விடுதியில் தேர்தல் பார்வையாளர் அவர்களிடம் பொதுமக்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்களை மாலை 5.00 மணி முதல் 6.00 பணி வரை நேரில் மனு அளிக்கலாம் என தேர்தல் பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.ஆய்வின் போது திட்ட இயக்குநர்இரா.மணி, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!