/* */

மழைநீர் வடிகால்களில் குப்பைகள்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகளை கொட்டாமல் பொதுமக்கள் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மழைநீர் வடிகால்களில் குப்பைகள்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
X

 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வருகிற வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால்களும் சுத்தம் செய்யப்பட்டு, மழைநீர் தங்கு தடையின்றி வெளியேற அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும், 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்திடும் வகையில் 20.09.2021 முதல் 25.09.2021 பேரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் நடத்திட தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரிய வடிகால்களான கச்சேரி ரோடு, துருகம் ரோடு, பயணியர் மாளிகை அருகில், சித்தேரி வாய்க்கால், ஏமப்பேர் ஏரிக்கரை வாய்க்கால், கீரனூர் ரோடு, மற்றும் நடுத்தர வடிகால் ஆகியயை 20.09.2021 முதல் 25.09.2021 வரை நடைபெற்ற மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமில் வடிகால்கள் தூர் வாரப்பட்டு தடையின்றி மழைநீர் வெளியேறும் வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட கழிவுகள் பொது மக்களுக்கு, இடையூறு இன்றி உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பெரிய வடிகால், நடுத்தர வடிகால் மற்றும் சிறிய வடிகால்கள் 75.60 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ளது. இவை தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு மழை நீர் தேங்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிக்குட்பட்ட கவரை தெரு, பால்நாயுடு சந்து, இடையர் சந்து, கடைவீதி, மணிக்கூண்டு சந்து, கிராம சாவடி தெரு, சுந்தர வினாயகர் கோவில் தெரு, ராஜா நகர், தித்தாலு நகர், விளாந்தாங்கல் ரோடு, வ.உ.சி. நகர், எம்.ஜி.ஆர். நகர், பசுங்காய மங்கலம் ரோடு, மிளாகாய் தோட்டம், தீப்பெட்டி தொழிற்சாலை, அண்ணா நகர், கீரனூர் ரோடு, ஏமப்பேர் மற்றும் குறுக்கு தெருக்களில் பெரிய ஜே.சி.பி. இயந்திரம் சல்ல இயலாத காரணத்தினால், சிரிய வடிவிலான ஜே.சி.பி. இயந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் தொடர்ந்து மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டு, வாய்க்கால்களிலிருந்துஅகற்றப்பட்ட கழிவுகள் நகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால்களும் சுத்தம் செய்யப்படுவதால், மழை காலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி, கொசுக்களால் ஏற்படும் நோய்கள் தடுக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் குப்பைகளை வீசாமலும், பிளாஸ்டிக் கழிவுகளை வடிகால்களில் விடாமலும் பொது மக்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Oct 2021 10:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’