சின்னசேலத்தில் குறுவை நெல் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள்
சின்னசேலம் பகுதியில் நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
சின்னசேலம் சுற்று வட்டார பகுதிகளான கனியாமூர், மேலுார், எரவார், சிறுவத்துார், நாட்டார்மங்கலம், அம்மகளத்துார் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சம்பா பருவத்தில் நடவு செய்யப்படும் பொன்னி, பி,பி.டி., போன்ற நெல் ரகங்கள் நல்ல மகசூலை கொடுப்பதால், அதனை செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் சாகுபடி செய்வது வழக்கம்.
அதேபோல் குறுவை நெல் சாகுபடியான கோ - 51, 45, டீலக்ஸ் போன்ற நெல் ரகங்களின் சாகுபடி காலம் மூன்று மாதம் என்பதால், நவம்பர் மாத தொடக்கத்தில் இதன் நடவு பணி நடைபெறும்.இதனையொட்டி, சின்னசேலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், குருவை நெல் சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu