மணிமுத்தாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்: ஆட்சியர் பி.ன்.ஸ்ரீதர் ஆய்வு

மணிமுத்தாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்: ஆட்சியர் பி.ன்.ஸ்ரீதர் ஆய்வு
X

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மணிமுத்தாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பி.ன்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை மற்றும் கன மழையில் மணிமுத்தா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அணைக்கு நீர்வரத்து 7,042 கன அடியாவும், நீர் வெளியேற்றம் 7,042 கன அடியாகவும் உள்ளது.

இவ்வணையில் இருந்து வெளியேற்றப்படும் மிகை நீரினால் ஆற்றின் இரு பக்க கரைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் பாதிக்கப்படாத வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story