ரூ.20 பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதி: அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்

ரூ.20 பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதி: அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்

பைல் படம்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக பெண் வேட்பாளர் ரூ.20 பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதியளித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சியில் 20 ரூபாய் பத்திரத்தில் வாக்குறுதிகளை பதிவு செய்து, கையெழுத்திட்டு வழங்கி, அ.தி.மு.க., பெண் வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் சுமதி என்பவர் போட்டியிடுகிறார்.

இவரது கணவர் பாலகிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில் வேட்பாளர் சுமதி தங்கள் பகுதி வாக்காளர்களுக்கு 20 ரூபாய் பத்திரத்தில் வாக்குறுதிகளை கூறி கையெழுத்திட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பத்திரத்தில், வேட்பாளர் தனது கணவரின் போட்டோவை ஒட்டி, 20வது வார்டு மக்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிடும் நான் தரும் உறுதிமொழி பத்திரம். குடிநீர் வழங்கல், பொது சுகாதாரம், சாலை மேம்பாடு மற்றும் மின்விளக்கு அமைத்தல், கோவில்திருப்பணிகள், கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாடு வழங்கல், பொது சுகாதாரம் ஆகியன உள்ளிட்ட பணிகளை நமது வார்டு பகுதிகளில் முழுமையாக செய்து தருவேன். எனவே, எனக்கு ஓட்டு போட்டு என்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story