கள்ளக்குறிச்சியில் தலைவர்கள் வருகையால் திமுகவினர் உற்சாகம்

கள்ளக்குறிச்சியில் தலைவர்கள் வருகையால் திமுகவினர் உற்சாகம்

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு தலைவர்கள் வருகையால் தி.மு.க.,வினர் உற்சாகத்துடன் களப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு தலைவர்கள் வருகையால் தி.மு.க.,வினர் உற்சாகத்துடன் களப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

வேட்பாளர்கள் போட்டி போட்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.ஆளும் கட்சியான தி.மு.க.,வினர் செலவில் தாராளம் காட்டுவதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து பிரசாரத்திற்கு வருவது கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.நேற்று முன்தினம் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராசா, கள்ளக்குறிச்சி உளுந்துார்பேட்டை, தியாகதுருகம் பகுதிகளில் பிரசாரம் செய்ய வந்தபோது உற்சாகத்துடன் தொண்டர்கள் திரண்டனர். அமைச்சர் வேலு பேரூராட்சி, நகராட்சி என அனைத்து ஊர்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அடுத்தடுத்து பிரசாரத்திற்காக கட்சியின் தலைவர்கள் வருவது தி.மு.க.,வினரிடம் உத்வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.,வினர் தலைவர்களின் பிரசாரத்திற்காக அக்கட்சியினர் காத்திருக்கின்றனர். முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டால் அக்கட்சியிலும் தீவிரம் காட்டத் துவங்கி விடுவர். அதன் பிறகு கடைசி நேரத்தில் தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கிவிடும்.

Tags

Read MoreRead Less
Next Story