கல்வராயன் மலைப்பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

கல்வராயன் மலைப்பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
X

கல்வராயன் மலைப்பகுதியில் 1,500 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1,500 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., செல்வகுமார் உத்தரவின் பேரில், கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் நேற்று கல்வராயன்மலை பகுதியில் சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தடுத்தான்பாளையம் ஓடையில் பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை கொட்டி அழித்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture