கள்ளக்குறிச்சி அருகே தேவபாண்டலம் ஏரியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

கள்ளக்குறிச்சி அருகே தேவபாண்டலம் ஏரியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
X

சங்கராபுரம்-தேவபாண்டலம் ஏரி கோடி வாய்க்காலை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம்-தேவபாண்டலம் ஏரி கோடி வாய்க்காலை கலெக்டர் இன்று ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவபாண்டலம் ஏரி நிரம்பி உபரி நீர் கோடி வாய்க்கால் வழியாக வெளியேறுகிறது.

இந்த உபரி நீர் அருகில் உள்ள நெல் வயல்களில் சூழ்ந்து 300 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்களில் தேங்கி நிற்கிறது. கலெக்டர் ஸ்ரீதர் ஏரி கோடி வாய்க்காலை பார்வையிட்டார். திட்ட இயக்குனர் மணி, தாசில்தார் பாண்டியன், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், அ.பாண்டலம் ஊராட்சித் தலைவர் பாப்பாத்தி நடராஜன், வருவாய் ஆய்வாளர் திருமலை, வி.ஏ.ஓ., கார்த்தி உடனிருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது