கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
X

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அலுவலர்களும் ஊழல் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுதும் அக்டோபர் 26 முதல் நவம்பர் 1ம் தேதி வரை ஊழல் ஒழிப்பு தின வார விழா கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழல் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஊழல் ஒழிப்பு தின வாக்கியங்களை அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் வாசித்து, உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு வழங்கினர்.

இதில் டி.ஆர்.ஓ., விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்கொழுந்து உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., அலுவலக வளாகத்தில் எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், ஏடி.எஸ்.பி.,க்கள் ஜவஹர்லால், விஜயகார்த்திக் ராஜா, சுப்புராயன் தலைமையில் காவல் துறை அலுவலர்கள் ஊழல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!